Thursday, October 8, 2009

நானும் கவிதை எழுதுகிறேன் ..........
பருவ வயதில் ஆசையற்று
ஜடமாய் நிற்க
நான் மட்டும் புதுப் பிறவியில்லை ..
உன்னில் ,
உன்னுறவில் உன் மொழியில்
உன்னழகில் எனக்கும்
ஆசை வந்தது !
அதுவரை கற்பனையில் மிதந்து
இன்பத்தில் மூழ்கி
உன்னை ரசித்து என்னை
மறந்து கொண்டிருக்கையில் ,
நீயும் தீனியாய் - என்னைப்
பார்க்க , சிரிக்க
குதுகலிக்க - நான் இன்னும்
முன்னேறி உலகையே மறக்க

என் திறந்த இதயத்தின்
உயிராக
பிரியமான உணர்வுகளில்
கருவாக - நீ உருவாக
உன்னில் - என்
உயிரையும் வைத்து
உணர்வுகளையும் உனக்காய்
சமர்ப்பித்து
களங்கமில்லாமல்
கபடமில்லாமல் காதலை
வேண்டிய போது

சினிமாக்களில்
புளித்து போனது போல்
"நட்புடனேயே பழகினேன் - தொடர்ந்தும்
நண்பர்களாகவே இருப்போம் " என்றாய்
ஆக , அதற்கு முன் - நீ
மொழி பேசிப் பழகியதேயில்லை.....
கனவுகளை
சிதைய வைத்து சோகங்களை
சுமக்க வைத்து பைத்தியமாய்
அலைய வைத்து ரசித்தது - ஏன் ?
கனாக்களில் கூட
அழுததில்லை உனக்காகத் தவிர !
வினாக்களாகவே தவிர
விடைகளாய் நீ
இருந்ததேயில்லை .....!
உனை அறியாமல்
புரியாமல் எனையும் மீறி
என்னிதயம் உனை
சுமந்து கொண்டது ...
ஏன் ???
இது ........ இது தான் காதலோ ??
நான் ஆண்களையே
கண்டதில்லையா ?
பேசியதில்லையா ?
அல்லது
பழகித்தான் இல்லையா ?
இருந்தும் இருந்தும்
நீ மட்டும் ...
இது இது காதலைத்
தூண்டியது நீ அல்லவா !!
நீ ஒதுங்கியிருக்க
நான் மட்டும் காதலித்திருக்க
நியாயமில்லை தான் .....
ப்ரியமானவனே ! மனம்
திறந்து சொல் ; எனை
விரும்பினாயா ? அவ்வாறு
காட்டினாயா ? அல்லது
விரும்பியும் முடியாத நிலையா ???
எனினும் இன்றும் உனை
விரும்புபவளாய் நானில்லை
வேண்டியவனாய் நீயும் இல்லை .
இப்போது தான் சிந்திக்கிறேன் !

ஆனால் இன்னும் உனை

என்னிதயத்தில் காண்கிறேன்

இது ............ எனது முதற் கா............

என்பதாலோ ? உன் உறவினை

விரும்பிய அந்த நாள் ஞாபகங்கள்

இன்றும் இனிக்கிறது ....

கடைசியில் நானும்

கவிதை எழுதுகிறேன் ..............
















1 comment: