Thursday, December 16, 2010



பேசாதிருக்கும் தோழனுக்கு......



காற்றில் படபடக்கும்
முந்தானை போல் ஆகிப்போனது
வாழ்க்கை...!
நேற்றோ கடந்து போன ஒன்று ....
நாளையோ கேள்விக் குறியான ஒன்று ...
இன்று மட்டுமே நிச்சயமான ஒன்று ...
சரிதான் ...
பிறகெப்படி
இத்தனை நாட்கள்
வீணாகிப் போயிற்று...?


நேற்று பிடித்தது
இன்று பிடிக்காமல் போகலாம் ...
இன்று பிடித்தது
நாளை பிடிக்காமல் போகலாம் ...
வாழ்க்கையின்
ஏதேனும் சில தருணங்கள்
நமக்கு உணர்த்தும்..........
நாம் தொலைத்த தவறவிட்ட
நேசங்களை ......



ஒரு இரயில் பயணத்தில்
சக பயணி
மணிக்கணக்காய் பேசிக்கொன்டிருந்தாள்
தன் தோழனிடம் ....
ஆச்சரியமாயிற்று எனக்கு ...
எப்படி ?
நமக்கிடையில்
பேசுவதற்கு
ஏதுமில்லாமல் போயிற்று ,
இத்தனை நாட்களாய் ...?!
சத்தியமாய் மறந்து போயிற்று
எனக்கு
உந்தன் வாய் மொழி ....

சில நேரங்களில்
தோன்றுகிறது ...
பூனையாகவோ ..... இல்லை
நாயாகவோ
பிறந்திருக்கலாமென்று ....
அதுதான் உனக்கு
பிடிக்குமென்பதால் .....

என் மீது
உனக்குள்ள உரிமைகளை
எடுத்துக்கொள்ள மறுக்கிறாய் …

உன்மீது
எனக்கு உரிமைகள்
உள்ளதா இல்லையா என்பதை
கூறவும் மறுக்கிறாய் …..


காதல் என்பது சுயநலம் ....
நேசம் என்பது பொதுநலம்...
பாசம் என்பது பிறர்நலம்...
காதல் தாண்டியது நேசம்..
நேசம் தாண்டியது பாசம்...
உன் மீது நான் கொண்ட பாசம்
உன்னிடமன்றி வேறு யாரிடம்
காட்டமுடியும்... .....




Monday, November 29, 2010



போய்விடு.........!!!!!!!


உந்தன் தொலைபேசி
அழைப்புக்கள்...............
என்னை உன்னோடு பேச
தூண்டினாலும்............
நீ இறுதியாய் சொன்ன
வார்த்தைகள்.........
வேண்டாமென தடுத்து
விடுகிறது...........




நான் சொன்னேனா என்னை
காதலி என்று..............
நீயாய் வந்தாய் உன்னை
பிடித்திருக்கிறது என்றாய்.........
என்னென்னவோ பேசினாய்........
ஒரு முறை இது நட்பு என்றாய்.....
இல்லை காதல் என்றாய்......
இறுதியில்..................................................
ஒன்றுமில்லை நீ வேறு
நான் வேறு என்று பிரிந்து
சென்றாய்.....................
இன்று மீண்டும் நீயின்றி...........
நான் இல்லை என
வசனம் பேசுகிறாய்............



நீ காதலித்த போதும்........
காதல் வேண்டாம் என
விலகிய போதும்...........
நீ என்னைப் பற்றி சிந்தித்தாயா...????
நான் உன் கைபொம்மையல்ல........
எனக்கும் இதயமுண்டு.......
இனியும்
என்னை தொடராதே.............
என் இதயம்
செத்துப் போய்விட்டது........
முயற்சிக்காதே.......
தோற்றுப் போவாய்..........
அதை உன் இதயம் தாங்காது..........




Sunday, November 21, 2010




மனதின் மூலையில்........



உன் பாத சுவடுகளின் வழியே
நான் சென்றடைந்த
பயணங்கள்............

காற்றை அலசி
நீ சுவாசித்த மூச்சை தேடியலைந்த
நிமிஷங்கள்............

மணல் வெளியில்
உன் பெயரெழுதி அதை
தொட்டு இரசித்த
கணங்கள்........

நெஞ்சக் கோப்பையில்
உன்னை மட்டும் நிறைத்து - நான்
நிறைந்திருந்த நொடிகள்........

அனைத்துமே
இன்று கனவாய்......
வெறும் கனவாய்............
மாறிப் போனாலும்.......

மனதின் ஒரு மூலையில்
நான் மனனம் செய்த
பத்துக் கட்டளையாய்
மறவாமல் (மறையாமல்) இருக்கிறாய்
நீ மறந்திடு என்று
சொன்ன பிறகும்..........





Monday, November 8, 2010



உன் பிரிவில்.........



அழும்போது கூட சிரித்தேன் - நீ
என் அருகில் இருக்கும் போது
சிரிப்பதாய் நடிக்கக்கூட
முடியவில்லை உன் பிரிவில்...........

உன் நினைவுகள் சுமக்கும்
என் இதயகூடு
சல்லரித்து சாவின்
விளிம்பில் இன்று....

உன்னை மறக்க நினைத்து
விழி மூடும்போதுகூட
உன் விம்பமே காட்சிகளாக
மறக்கவும் முடியவில்லை
நினைக்கவும் உரிமையில்லை.
நரக வேதனையில் நான்...

உன்னோடு கழித்த நாட்கள்
பல ஜென்மங்கள் வாழ்ந்த
இன்பத்தை தந்தாலும்
நீ என்னை பிரியும்
ஒவ்வொரு வினாடியும்
அடுத்த பிறப்பையும்
கொல்லுவதாய் கசக்குதடா



Wednesday, September 29, 2010

நான் தான் .......!!!


உன் .........
உதட்டின் ஓரத்தில் தான்
எத்தனை கவிதைகள் .....
அதற்கு ....
கவிநயம் தந்தவள்
நான் தான் ........



உன் ....
விழிகளுக்கு பின்னால்
வழுக்கி விழுந்த
என்னை பார் - என்
அன்பு.....
ஊனமாகி விடவில்லை ...



நீ ......
கணக்கெடுப்பு செய்யும்
கட்டழகன் அல்ல ...
ஆனால் ......
நினைவில் நிற்கும்
ஓவியம் ......
நிஜத்தில் நினைவை
தொலைத்து நிற்கின்றேன் .......



உன் .....
வார்த்தைகளுக்கு
வடிவம் தந்தவளும்
நான் தான் .....
உன் சிரிப்பை
சித்திரமாக்கியதும்
நான் தான் .............



உன் .....
இதயத்திற்கு
ஒலியை தந்தவளும்
நான் தான் ....
எனக்கு - நீ
இழப்பையும்
இறப்பையும்
ஏற்படுத்தி விடாதே ............

Wednesday, September 1, 2010



காதல் வாழட்டும் .....


காதலனே !
நீ வருவதற்குள் நான்
மடிந்து விட்டால் - என்
அஸ்தியை மட்டுமாவது - உன்
கையால் கரைத்து விடு
அந்த தொடுகையிலாவது
வாழட்டும் நம் காதல் ...................



கண்ணீர் .....


உன் நினைவுகளை
எழுத முன்
என் கன்னங்கள்
நனைகின்றன ..........
கண்ணீருக்கு பொறுக்கவில்லை
முந்திச்சென்று அது
கடதாசியை
நனைக்கின்றது......


பிரிவு ......


பிரிந்த போதுதான்
தெரிந்தது - எனக்கு
நீ இல்லாமல் வாழ்வது
எப்படி என .......
புரிய வைக்கத்தான்
என் வாழ்வில் - நீ
வந்தாய் என்பது ......

Monday, May 24, 2010

மிஸ்ஸிங் .....!!!

அன்று
சாப்பிடும் போது உனக்கு
அந்த விக்கல் கூட
என்னை நினைத்து என்றாய் ......
இன்றோ !
சாப்பாட்டில் உப்பு
தூக்கல் என்றால் கூட
தூக்கி எறிகின்றாய்
சாப்பாட்டை மட்டுமல்ல
என்னையும் தான் ................
அன்று என்
தலைமுடி காற்றில் கலைந்தாலும்
ஏனோ கவலை கொள்வாய் ...........
இன்றோ
கண்கள் கலங்கினாலும்
கண்டு கொள்வதில்லை ...........
புரியவில்லை எனக்கு ..!!!!
காலங்கள் கடந்து போனால்
காணாமலா போகும்
காதல் .............??????

Tuesday, May 11, 2010

நெஞ்சின் பலவீனம்

ஆசை நெஞ்சே !
மோசம் செய்யாதே
கிடைக்காததை நினைத்தாய் !
கிடைக்குமென்று நம்பினாய் !
கிட்டேயிருந்து எண்ணினாய் !
தூரே கண்டு மகிழ்ந்தாய் !
சிறு வார்த்தையால் பேரமுதானாய் !
பெறு வார்த்தையால் ஆனந்தக் கடலிலானாய் !
கதைப்பதைக் கனவாக்கினாய் !
காண்பதை நினைவாக்கினாய் !
காலம் கடந்து ஞானம் பெற்றாய் !
அதன் பின் தெளிவு பெற்றாய் !
உள்ளம் எண்ணியது
உடல் மகிழ்ந்தது
வேலைகளை வீணாக்கியது
கால்நோகக் காத்திருந்தது
இத்தனையும் காலத்தை
வீணாக்கப் பயன்படுத்திய
அற்ப நெஞ்சின் பலயீனம் !

ஒ ! நெஞ்சே ! பலயீனம் அடையாதே !
உடன் நம்பி நடக்காதே !
உடந்தையாய் வீணாக்காதே !
நெஞ்சே !
இனியாவது பார்த்து நட ....!

Sunday, May 2, 2010

எறும்புகளோடு ஓர் பேச்சு வார்த்தை

எறும்புகளே! எறும்புகளே !
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே !

பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே !

உலகின் மிகச் சிறிய ஆச்சரியமே !

உங்களோடு பேச வேண்டும்
சிறிது நேரம் செவிசாய்ப்பீரா?

" நின்றுபேசி நேரங்கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும் "

ஒரு சென்ட்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே !

அற்ப உயிரென்று
அவலப்பட்டதுண்டா ?

" பேதை மனிதரே !
மில்லி மீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடை போல ஐம்பது மடங்கு
எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா ? "

உங்கள் பொழுது போக்கு ..........?

" வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு

ஆறு முதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு - இதில்
ஓய்வென்ன ஓய்வு - தலை
சாய்வென்ன சாய்வு ? "

இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

" உம்மைப் போல எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு

செரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று

செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு

இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு "

இனப் பெருமை பற்றிச்
சிறுகுறிப்பு வரைக ........

" சிந்து சமவெளிக்கு முற்பட்டது எங்கள்
பொந்து சமவெளி நாகரிகம்
ராணிக்கென்று அந்தப்புரம் -
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை -
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லா இடுகாடு -
மாரிகாலச் சேமிப்புக்கிடங்கு -
எல்லாம் அமைந்தது எங்கள் ராஜாங்கம்

எங்கள் வாழ்கையின்
நீளமான நகல் தான் நீங்கள் "

உங்களையே நீங்கள்
வியந்து கொள்வதெப்போது ?

மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்து விடும் எங்கள்
மத யானைக்குள் புகுந்து
மாய்த்து விடும் போது "

நீங்கள் வெறுப்பது .... நேசிப்பது ......?

" வெறுப்பது -

வாசல் தெளிக்கையில்

வந்து விழும் கடல்களை

நேசிப்பது -

அரிசிமாக் கோலமிடும்

அன்னப் பூரணிகளை

சேமிக்கும் தானியம்

முளை கொண்டால் ஏதுசெய்வீர் ...?

" கவரும் போதே தானியங்களுக்கு

கருத்தடை செய்து விடுகிறோம்

முனைகளைந்த மணிகள்

முளைப்பதில்லை மனிதா ! "

உங்களால் மறக்க முடியாதது .....?

" உங்கள் அகிம்சைப் போராட்ட

ஊர்வலத்தில்

எங்கள் நான்காயிரம் முன்னோர்கள்

நசுங்கிச் செத்தது "

எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம் ....?


" எங்கள் காலனி எறும்புதானாவென
மோப்பம் பிடிக்கும் முயற்சியது

எம்மவர் என்றால்
வழி விடுவோம்
அன்னியர் என்றால்
தலையிடுவோம் "

சிறிய மூர்த்திகளே - உங்கள்
பெரிய கீர்த்தி எது....?


" அமேஸான் காட்டு ராணுவ எறும்புகள்
யானை - வழியில் இறந்து கிடந்தால்
முழுயானை தின்றே முன்னேறுவோம்

மறவாதீர் !
எறும்புகளின் வயிறு
யானைகளின் கல்லறை "


சாத்வீகம் தானே உங்கள்
வாழ்க்கை முறை ...........?
" இல்லை
எங்களுக்குள்ளும் வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு
அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு "
எறும்புகளின் சத்தமா
இதுவரை கேட்டதில்லை ........
" மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள் என்ன செய்யும் ..?"

நன்றி எறும்பே நன்றி
" நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு "
எதற்கு ? எதற்கு ?
" காணாத காமதேனு பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த
புராணம் வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு "

Friday, April 23, 2010



ஒரு துக்க நாள்

அன்று
ஜன்னல்களை அடைத்து
சிறு வெளிச்சமும் தீண்டி விடாதபடி
அறையை இருட்டாக்கி இருந்தேன் .......

மின் விசிறி சுழலவில்லை
உடலிலிருந்து வெளியேறிய
துக்க வெப்பம்
இருள் வெளியை நிறைத்திருந்தது ........

பத்து முறையேனும் குளித்திருப்பேன்
எல்லாமே அவசரக் குளியல்
தண்ணீரை ஊற்றி ஊற்றி அழித்ததில்
அழியவில்லை ஏமாற்றம் ...
பூமியை விழுங்கி விட்டதைப் போல
உள்ளுக்குள் உடல்
பரமாகியிருந்தது............
தடித்த போர்வையை இழுத்துப் போர்த்தினேன்
கைகளை இணைத்து
மடித்து ஒருக்களித்திருந்த
கால்களுக்கிடையில் பதுக்கிக் கொண்டேன்
எனக்குள் நானே போய்விடுமளவு
உடலைக் குறுக்கித் துவண்டிருந்தேன் .....
என் சுவாச ஒலியே
பேரிரைச்சலாக கேட்டதேனக்கு
மூச்சை அவ்வப்போது
அழுத்தமாக அடக்கினேன்
அப்படியே தூங்கியிருக்க வேண்டும் நான் ......
கண்களை இறுக மூடிய போது
கைப்பற்றித் தலை சாய்த்துக் கொண்ட நாட்கள்
கொடுந்தீயாய் நிழலாடின ...........
என்னைச் சுற்றிலும்
இறந்து கிடந்த கடிதங்களிலிருந்து
உயிரற்ற வார்த்தைகள்
உதிர்ந்து மலையளவு
குவிந்து விட்டது ..........
அதில் நான் மூழ்கிப் போகவிருந்தேன்
மூச்சு நெரிய
அடக்கமாட்டாமல்
அழத்தொடங்கியிருந்த நேரம் .........
அந்த நாள் முடிந்து போயிருந்தது
அறையெங்கும் காதல்
அலங்கோலமாய் கிடந்தது ........

Thursday, April 15, 2010

தூது

காற்றுக்கு தூது விட்டேன்
தென்றலாய் உரசிச் சென்றது ........
நிலவுக்கு தூது விட்டேன்
ஒளியாய் வீசிச் சென்றது .................
கடலுக்குத் தூது விட்டேன்
அலையாய் வந்து போனது ..............
தண்ணீருக்கு தூது விட்டேன்
மழைத்துளியாய் கொட்டிச் சென்றது ........
உன் மனசுக்கு தூது விட்டேன்
அதை நீ தெருக்குப்பையில்
வீசிச் சென்றாய் ......

Saturday, March 27, 2010

காதலே உன்னால் .........

நான் மௌனமாக
இருக்கிறேன்
என்று அன்பே
அசட்டையாக
இருந்து விடாதே
மௌனத்தின் உள்ளே தான்
அழுது கொண்டிருக்கிறேன் ......

காதலுக்கு கண் இல்லையாம்
கண்ணீர் மட்டும் எப்படி........?

நீ உன் உள்ளம் எனக்கு சொந்தம் என்றாய்
நான் என் உயிரே உனக்கு சொந்தம் என்றேன்
உன் மடி மீது நான் வருவேன் என்றாய்
நான் உன் மார்பில் சாய நின்றேன்
இன்று நீயோ என்னை வெறுக்கிறாய்
நானோ என்னையே வெறுக்கிறேன் .....

என் கனவுகளிலும்
நினைவுகளிலும்
கலந்தவனே
நீ இன்றி என் வாழ்வு
கனவாகிவிட்டது ......


கனவுகளில் கூட
கலங்குகிறேன்
என் காதலனான
நீ
என்னை
புரிந்து கொள்ளவில்லை
என்று ..........

கண்களில்
நீ வந்த போது
தூக்கத்தை மறந்தேன்
ஆனால்
கனவுகளுடன் விழிகளில் கலந்து
இதயத்தில் நிலையான போது
தினம் தினம்
கற்பனையில் மிதந்தேன்
நீ என்னை காதலிப்பதைப் போல் .....

நீ
உன்னை மறக்கச் சொன்னாய்
ஆனால் உயிரினில் கலந்தவன்
உன்னை மறப்பதென்றால்
நான் உயிரை விட வேண்டும்
உயிரை விடவா ?
இதற்கு பதில் கூறு
உன்னை மறக்கிறேன் ......
என்னை தொலைத்து என்
நினைவை தேடினேன் ...
என் நினைவை தொலைத்து
என் கனவை தேடினேன் ..
கனவை தொலைத்து
வாழ்வை தேடினேன் ..
எல்லாம் என்னை விட்டு
சென்று விட்டது அவனோடு ......
இனியவனே
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழித்துவிடலாமென்று
நினைக்காதே
அந்த சூரியன் கூட
என்னை எரிக்கலாம்
ஆனால்
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழிக்க முடியாது
நான் உயிருடன்
இருக்கும் வரை
கனவுகளில் மலர்வதில்லை
காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை
உயிரானவனே
உன்னை நினைத்து துடிக்குமடா
என் இதயம் ......
என் கவிதைகளை நீ பார்க்கும் வேளை
நான் காதல் செய்த காலத்தை
நினைவு கொள்ளும் உன் உள்ளம்
உன் உள்ளம் நினைவு கொள்ளும்
காலத்தில்
உன்னை நினைத்து வாழ்ந்திடும் எந்தன்
நெஞ்சம் .................
உன்னை உயிராக நேசித்திடும்
என் உடல்
உயிர் வாழும் வரை உன்னை
பார்த்திடும் என் உள்ளம்
உள்ளம் உன்னை பார்த்திடும்
வேளை
நிலைத்திடும் என் காதல்
என் காதல் நிலைத்திடும்
வேளை
உன் நினைவினை வாழ்ந்திடும்
இந்த ஜீவன் .......
உன்னை நினைத்து நான் படும்
வேதனைகளை
கவிதையாக வடிக்கிறேன்
உன் காதலுக்காக
நான் துடி துடிக்கிறேன் என்பதை
என் கவிதைகளினூடாக
நீ புரிந்து கொண்டு
உன் காதலை
என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன் கண்களில்
விழி நீரோடு .......