Thursday, December 16, 2010



பேசாதிருக்கும் தோழனுக்கு......



காற்றில் படபடக்கும்
முந்தானை போல் ஆகிப்போனது
வாழ்க்கை...!
நேற்றோ கடந்து போன ஒன்று ....
நாளையோ கேள்விக் குறியான ஒன்று ...
இன்று மட்டுமே நிச்சயமான ஒன்று ...
சரிதான் ...
பிறகெப்படி
இத்தனை நாட்கள்
வீணாகிப் போயிற்று...?


நேற்று பிடித்தது
இன்று பிடிக்காமல் போகலாம் ...
இன்று பிடித்தது
நாளை பிடிக்காமல் போகலாம் ...
வாழ்க்கையின்
ஏதேனும் சில தருணங்கள்
நமக்கு உணர்த்தும்..........
நாம் தொலைத்த தவறவிட்ட
நேசங்களை ......



ஒரு இரயில் பயணத்தில்
சக பயணி
மணிக்கணக்காய் பேசிக்கொன்டிருந்தாள்
தன் தோழனிடம் ....
ஆச்சரியமாயிற்று எனக்கு ...
எப்படி ?
நமக்கிடையில்
பேசுவதற்கு
ஏதுமில்லாமல் போயிற்று ,
இத்தனை நாட்களாய் ...?!
சத்தியமாய் மறந்து போயிற்று
எனக்கு
உந்தன் வாய் மொழி ....

சில நேரங்களில்
தோன்றுகிறது ...
பூனையாகவோ ..... இல்லை
நாயாகவோ
பிறந்திருக்கலாமென்று ....
அதுதான் உனக்கு
பிடிக்குமென்பதால் .....

என் மீது
உனக்குள்ள உரிமைகளை
எடுத்துக்கொள்ள மறுக்கிறாய் …

உன்மீது
எனக்கு உரிமைகள்
உள்ளதா இல்லையா என்பதை
கூறவும் மறுக்கிறாய் …..


காதல் என்பது சுயநலம் ....
நேசம் என்பது பொதுநலம்...
பாசம் என்பது பிறர்நலம்...
காதல் தாண்டியது நேசம்..
நேசம் தாண்டியது பாசம்...
உன் மீது நான் கொண்ட பாசம்
உன்னிடமன்றி வேறு யாரிடம்
காட்டமுடியும்... .....