Monday, December 7, 2009

காதல் .....


கனவுகளில் மலர்வதில்லை

காதல் ........

இதயத்தில் மலர்வதே

காதல் .........

இதயம் இறக்கும் வரை

உயிரானவனே .....

உன்னை நினைத்து துடிக்குமடா

என் இதயம் ..........!


அறிந்தேன் ! உணர்ந்தேன் !

உருகிநின்றேன் !



மழையின் வேகம் - மழைத்துளி

என் மேல் பட்ட போது

அறிந்தேன் ....!

தென்றலின் சுகம் - அது

என்னைத் தொட்ட போது

உணர்ந்தேன் .....!

தீயின் சோகம் - காதல்

என்னைச் சுட்ட போது

உருகி நின்றேன் .......!




மேகமே ............
சுட்டெரிக்கும் சூரியனை
சுகம் கொடுக்க மறைக்கும்
வெண் மேகமே .....!
உன்னிடம் உரிமையுடன்
ஒரு சில வினாடிகள் ------


உன் குளிர் துளிகள்
தரணியில் விழுகின்றது
மழையாக.......
உன் பிறப்பு தூய்மை தான் !
சந்தேகமேயில்லை அதில் ..
உன் துளிகள்
சேறுடன் சேர்க்கிறது!
கடலுடன் கலக்கிறது !
சாக்கடையில் சரணடைகிறது
மனிதனும் அப்படித் தானோ ?


Saturday, December 5, 2009

வெண்புறா ....

சமாதானக் கணவன்
மரித்து விட்டதால்
வெள்ளாடை உடுத்திய
விதவை -
வெண்புறா .................

நட்சத்திரங்கள்

கீழே தானே கடல்
மேலே மீன்கள் என்ன செய்கின்றன ?

ஓர் 'அங்க ' நாடகம்

' என் உதட்டில் உன் பெயர் எழுது '
' இச் '
' அட , இத்தனை சிறியதா உன் பெயர்! '

கடற்கரை ....

இதயங்கள் அதிகம்
தொலைந்து போகுமிடம் ........


கவிதை

கனவிழந்து
கண்விழித்த
கரங்கள்
கனவின் நிழலாய்
வரையும்
சித்திரம் ......

Thursday, December 3, 2009

மண்ணறையை நாடி என் உடல் ...................


என் இரவுகள்
மயானமிடுகின்றன
அதற்குள் என்
உடலுக்கும்
உயிருக்கும்
நீண்ட நேர
வாக்குவாதம் ...

இருவரையும்
என்னால்
சாந்தப்படுத்த
முடியவில்லை .
ஒருவரை ஒருவர்
விட்டுப் பிரிந்து
விட்டனர் ...

உள்ளிருந்து ஒப்பாரி
முழங்கியது .
என் வீட்டு வாசலில்
பலர் கூடினர்
எனக்கெதுவும்
புரியவில்லை ...


என் உடல்
உணர்வற்றுத்
தரையில் கிடந்தது .
உள்ளே இருக்கும்
இதயம் மட்டும்
உயிருடன் ..........
நேற்றைய பொழுதை
நெஞ்சுக்குள்ளிருந்து
வெளியனுப்புகிறேன் .
அதில் நிழலாடுகிறது
உன் விம்பம் ......

என் நினைவுகளை

கழற்றிவிட்டு

நிம்மதியாய் நீ

சென்றுவிட்டாய்

நிஜங்களை

மறந்து வாழும்

வித்தை எனக்குத்

தெரியாது ...

உனக்கு

தொல்லையாய் வாழ

என் மனம்

இடமளிக்கவில்லை .

உன் வாழ்க்கை

எல்லையாக

வாழ்ந்தேன் ...


உன் பாசம்

நிறைந்த பார்வை

படரும் வரையில்

என் உடல்

வடுக்கள்

மறையமாட்டேன் என

உடன்படிக்கை

செய்திருந்தன ...

என் உயிரை
உசுப்பிச் சென்ற
உன் முற்சொற்கள் இம்
மரணப் படுக்கையிலும்
என் முன்னே
தோன்றுகின்றன ...
நீ வெறுத்துச்
சென்ற இந்நாள் .
என் கல்லறையில்
பதியப்படவே
என் ஆத்மா
முடிவு செய்து
விட்டது ....

உணர்வுகளைக்
கொன்று விட்டு
உலகைப் பிரிந்த
நேரத்திலும்
என் மனதோ உன்
வரவுக்காய்
தவமிருக்கிறது ....

கல்லறைக்குள்
என் உடலை
காணிக்கையாக விடும்
பொழுதும்
என் இமைத்திரையை
மீறி வரும்
கண்ணீரும் ........

உன் திருமுகம்
ஒரு தரம் காணவே
மற்றவரை நொந்து
கொள்கிறது .
அது அவர்களின்
செவிகளில்
விழ மாட்டாது ....
அதை உனக்கு
மட்டும்
உன் இதயத்தில்
இதுவரை
இருந்த நான்
கூறுவேன் .....
அதை கேட்டு நீ
வந்து விட எண்ணாதே ..
வேண்டாம் ...
வேண்டாம் ....
இப் பாவியின்
இக்கோலத்தை
கண்டு
தாங்குமளவிற்கு
உன் மனம்
இதுவரை
வலிமை பெறவே
இல்லை ....
உன் கால்களை
மறந்தேனும்
என் திசை
நோக்கி
முன் வைக்காதே
நீ வந்து விடாதே ...
அப்போது
உன்னையும் என்னுடன்
வருமாறு நான்
அழைத்து விடலாம்
நீ வந்து விடாதே ..
நான் போகிறேன்
உன் வாழ்வு
சிறக்கட்டும் .
என்னை மறந்து விடு
மன்னித்து விடு ......
உனக்காய் வாழ்ந்திடு
உன் உறவுகளுக்காய்
நீ வாழ்ந்து விடு
ஆனந்தத்தை
அள்ளி வழங்கட்டும்
எதிர்காலம் .......
எதைப் பற்றியும்
அறியாச்
சமூகம் உனைத்
தூற்றலாம் .
அதற்காய்
ஒரு போதும்
சோர்ந்து விடாதே .....

சந்தர்ப்பங்கள்
சாபமாகும்
இறுதித் தருவாயிலும்
உன் நலனுக்காகத் தான்
நான் புதைக்கப்பட்டிருப்பேன்
என கல்லறையிலும்
உயில் எழுதியிருப்பேன் ......