Tuesday, May 11, 2010

நெஞ்சின் பலவீனம்

ஆசை நெஞ்சே !
மோசம் செய்யாதே
கிடைக்காததை நினைத்தாய் !
கிடைக்குமென்று நம்பினாய் !
கிட்டேயிருந்து எண்ணினாய் !
தூரே கண்டு மகிழ்ந்தாய் !
சிறு வார்த்தையால் பேரமுதானாய் !
பெறு வார்த்தையால் ஆனந்தக் கடலிலானாய் !
கதைப்பதைக் கனவாக்கினாய் !
காண்பதை நினைவாக்கினாய் !
காலம் கடந்து ஞானம் பெற்றாய் !
அதன் பின் தெளிவு பெற்றாய் !
உள்ளம் எண்ணியது
உடல் மகிழ்ந்தது
வேலைகளை வீணாக்கியது
கால்நோகக் காத்திருந்தது
இத்தனையும் காலத்தை
வீணாக்கப் பயன்படுத்திய
அற்ப நெஞ்சின் பலயீனம் !

ஒ ! நெஞ்சே ! பலயீனம் அடையாதே !
உடன் நம்பி நடக்காதே !
உடந்தையாய் வீணாக்காதே !
நெஞ்சே !
இனியாவது பார்த்து நட ....!

2 comments:

  1. சிறு வார்த்தையால் பேரமுதானாய் !
    பெறு வார்த்தையால் ஆனந்தக் கடலிலானாய் !
    கதைப்பதைக் கனவாக்கினாய் !
    காண்பதை நினைவாக்கினாய் !
    காலம் கடந்து ஞானம் பெற்றாய் !
    அதன் பின் தெளிவு பெற்றாய் !

    நல்லாயிருக்கு...... அத விட உண்மையும் அதுதாங்க...nice

    ReplyDelete