Monday, December 7, 2009

மேகமே ............
சுட்டெரிக்கும் சூரியனை
சுகம் கொடுக்க மறைக்கும்
வெண் மேகமே .....!
உன்னிடம் உரிமையுடன்
ஒரு சில வினாடிகள் ------


உன் குளிர் துளிகள்
தரணியில் விழுகின்றது
மழையாக.......
உன் பிறப்பு தூய்மை தான் !
சந்தேகமேயில்லை அதில் ..
உன் துளிகள்
சேறுடன் சேர்க்கிறது!
கடலுடன் கலக்கிறது !
சாக்கடையில் சரணடைகிறது
மனிதனும் அப்படித் தானோ ?


1 comment:

  1. சாக்கடையில் சரணடைகிறது
    மனிதனும் அப்படித் தானோ ?//

    வித்தியாசமான கற்பனைதான்

    :(

    ReplyDelete