காட்டிக்கொள்ளாத கண்கள்..

முன்பெல்லாம் பழக்கப்படாதவள்
என்சோகம் சொல்லிக்கொள்ளாமலே
கன்னத்தை நனைத்துவிடும் .....

வேதனையும் வலியும்
கண்ணீரும் விம்மலுமாய்
கடைசிவரை தொடரும்
தனிமை என்னை
தாலாட்டிய போதெல்லாம்
துணைக்குக் கண்ணீர்
துவண்டுவரும்..................

நெருடிநெருடி நெஞ்சம்
சுயமிழந்து போனது......
வேதனை வருடல்களால்
வியந்து ஊனமானது இதயம்............
ஏமாற்றத்தின் படிப்பினைகள்
வடுவாக வடிவுகொடுத்தது........

இப்போதெல்லாம் ஏனோ
பிரிவும் துயரும்
புன்னகைக்கிறது.............
தனிமையும் தோல்வியும்
தட்டிக்கொடுக்கிறது..................
நம்பிக்கையூன்றி
நடக்கிறது இதயம்...........


No comments:
Post a Comment